மீண்டும் ஆஸ்கர் வெல்வாரா ஆஸ்கர் நாயகன்?
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது உலகம் போற்றும் முக்கின இசை கலைஞராக உருவெடுத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். தமிழ் மலையாளம், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், அரபி ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழி படங்களுக்கும் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், இசை தொடர்பான படங்களை தயாரித்தும் வருகிறார்.
தனது முதல் படமான ரோஜா படத்திற்கு தேசிய விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், ஸ்லாம்டாக் மில்லியனர் படத்திற்காக சினிமா துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாக இருக்கும் ஆஸ்கார் விருதை வென்று அசத்தினார். அந்த வகையில் ஆடு ஜீவிதம் படத்திற்காக பின்னணி இசைக்காக ஹாலிவுட்டின் உயரிய விருதான ‘HMMA’ விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் 2025-ம் ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
ஆடு ஜீவிதம் படத்தில் இடம்பெற்ற Istigfar, Puthumazha ஆகிய பாடல்கள் ஆஸ்கர் விருது சிறந்த பாடல் பரிவில் பங்கேற்றுள்ளது. இதனுடன் சேர்த்து மொத்தம் 89 பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. மேலும் சிறந்த பின்னணி இசைப்பிரிவில் 146 படங்கள் போட்டியில் உள்ளன. இவற்றில் வாக்கெடுப்பு நடத்தி இறுதியாக 15 பாடல்கள் மற்றும் 20 பின்னணி இசை ஆகியவை அடுத்தகட்டத்திற்குத் தேர்வாகும். அந்த வகையில் ஆடு ஜீவிதம் படம் அடுத்த கட்டத்திற்குச் செல்லுமானால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மீண்டும் ஓர் ஆஸ்கர் நிச்சயம்.
.png)