1. Home
  2. தமிழ்நாடு

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்கட்டணம் செலுத்துவோர் தங்களது ஆதார் எண்ணை இணையத்தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது. ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த உத்தரவு கடந்த 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்!!

நாளை மறுநாள் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும். பண்டிகை தினங்கள் தவிர, ஞாயிற்றுகிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31ஆம் தேதி வரை பொதுமக்கள் மின்கட்டணத்தை ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி செலுத்தலாம் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like