1. Home
  2. தமிழ்நாடு

மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்… மருமகன் கொடூர கொலை!!

மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர்… மருமகன் கொடூர கொலை!!

மாமியாருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மருமகன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (27) என்பவர் மாமியார் இன்னாசியம்மாள் (40) வீட்டில் மனைவி டயானா மேரியுடன் (22) வசித்து வந்துள்ளார். செல்வராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்வராஜ் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. இதனால் மனம் வேதனைக்கு உள்ளான இன்னாசியம்மாளும், மகள் டயானா மேரியும், வெந்நீரில் மிளகாய் பொடி கலந்து செல்வராஜ் மீது ஊற்றினர்.



உடல் முழுவதும் வெந்துபோன செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து டயானா மேரியையும், இன்னாசியம்மாளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். செல்வராஜ் இறந்ததை அடுத்து வழக்கு கொலை வழக்கமாக மாற்றப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like