1. Home
  2. தமிழ்நாடு

மாதிரிகளை உடனே அனுப்புங்க.. தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவு..!

மாதிரிகளை உடனே அனுப்புங்க.. தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவு..!

2023-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்துகொள்ளும் அலங்கார ஊர்திகளின் மாதிரி மற்றும் தகவல்களை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26-ம் தேதி குடியரசு தினவிழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும், ராணுவத்தின் இசைக் குழுக்களும் மிகவும் புகழ்பெற்றவை. முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். மேலும், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும்.


அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை வரும் 30-ம் தேதிக்குள் அனுப்ப தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது. மத்திய அரசின் தேர்வுக்குழு அலங்கார ஊர்திகளின் பட்டியலை இறுதி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதிரிகளை உடனே அனுப்புங்க.. தமிழகத்திற்கு மத்திய அரசு உத்தரவு..!

நடப்பு (2022) ஆண்டு தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட பாரதியார், வேலு நாச்சியார், வ.உ.சிதம்பரனார் போன்றவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like