மாணவர்கள் குஷி..! பள்ளி மாணவர்களுக்கு 41 நாள்கள் கோடை விடுமுறை..!
1ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையான மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி (செவ்வாய்) முதல் ஏப்ரல் 21ஆம் தேதி (திங்கள்) வரை காலை நேரத்தில் முழு ஆண்டு தேர்வு நடைபெறும்.
4 ஆம் வகுப்பு மற்றும் 5 ஆம் வகுப்பு வரையான மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதி (புதன் கிழமை) முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி (திங்கள் கிழமை) வரை மதியம் நேரத்தில் தேர்வு நடைபெறவுள்ளது.
6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையான மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி (செவ்வாய் கிழமை) முதல் ஏப்ரல் 24ஆம் தேதி (வியாழக் கிழமை )வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதியில் இருந்தும், 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்குகிறது.
மீண்டும் பள்ளி ஜூன் 2ஆம் தேதி திங்கள் கிழமை தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 41 நாள்கள் கோடை விடுமுறை விடப்பட உள்ளது.
6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 38 நாள்கள் கோடை விடுமுறை விடப்பட உள்ளது.
ஜூன் மாதத்தில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருந்ததன் காரணமாக கடந்த இரு ஆண்டுகள் பள்ளித் திறப்பு ஒரு வாரம் முதல் இரு வாரம் வரை தள்ளிப் போனது. அதேபோல் இந்த ஆண்டு ஜூன் மாதமும் வெப்பநிலை அதிகமாக இருந்தால் மேலும் ஒரு வாரம் கோடை விடுமுறை நீட்டிக்கப்படலாம்.