1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ் அறிவிப்பு..!!

மாணவர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ் அறிவிப்பு..!!

பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறிய அம்சங்கள் குறித்து பார்க்கலாம்..

நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும்.

பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆசிரியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள்.

நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும்

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ₹79,000 கோடியும், கட்டமைப்பு திட்டங்களுக்கு ₹10 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கான ₹2,40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 9 மடங்கு அதிகம்..

50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டு தொடரும்.

கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன்வளர்ப்புக்கு முன்னுரிமை அளித்து விவசாய கடன் இலக்கு ₹20 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்!

கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ₹5,300 கோடி வழங்கப்படும்.

9.6 கோடி சமையல் எரிவாயு கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, 102 கோடி பேருக்கு 220 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன, 47.8 கோடி ஜன்தன் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.

இ-கோர்ட் திட்டத்தின் 3வது கட்டத்திற்கு ₹7000 கோடி ஒதுக்கீடு! கூடுதலாக 50 விமான நிலையங்கள், ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்படும்

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like