1. Home
  2. தமிழ்நாடு

மருமகள் கண்களில் ஆசிட் ஊற்றிய கொடூர மாமியார்!!


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மருமகள் மீது கழிவறை ஆசிட்டை ஊற்றிய கொடூர மாமியாரை போலீஸார் கைது செய்தனர்.

முகேஷ்ராஜ் என்பவருக்கும், 7 வருடங்களுக்கு முன்பு கிருத்திகா என்ற பெண்ணுடன் திருமணமானது. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முகேஷ் அவிநாசி பகுதியில் வேலை செய்து வருகிறார் .

முகேஷின் தாய் ஆண்டாளுக்கும், கிருத்திகாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவதாகவும், மருமகள் மீது சந்தேகப்பட்டு ஆண்டாள் கொடுமைப்படுத்தி வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை கிருத்திகா தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து வந்த மாமியார் ஆண்டாள், கிருத்திகா முகத்தில் ஊற்றியுள்ளார்.


மருமகள் கண்களில் ஆசிட் ஊற்றிய கொடூர மாமியார்!!

ஆசிட் பட்டத்தில் வலியால் துடித்தக்கொண்டிருந்த போது, கிருத்திகா வாயில் கொசு விரட்டி மருத்தையும் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். கிருத்திகாவின் அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டனர்.

முகம், கண், காது மற்றும் உடல் மீது ஆசிட் பட்டத்தில் பலத்தக் காயமடைந்த கிருத்திகா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிருத்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள், ஆசிட் ஊற்றப்பட்டதால் அவர் கண் பார்வை இழந்ததாக தெரிவித்துள்ளனர்.


மருமகள் கண்களில் ஆசிட் ஊற்றிய கொடூர மாமியார்!!

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருத்திகாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாமியார் ஆண்டாளை கைது செய்தனர்.

அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து, அவரது மகன் உட்பட குடும்பத்தினரை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

நெவ்ஸ்டம்.in

Trending News

Latest News

You May Like