1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் ஜெயபாரதி காலமானார்..!

Q

தமிழில் முதல்முறையாக 1979ஆம் ஆண்டு கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரித்து இவர் இயக்கிய படம் ‘குடிசை’. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. இதனையடுத்து ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’, ‘உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
கடைசியாக 2010ஆம் ஆண்டில் ‘புத்திரன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம் உள்பட தமிழக அரசின் மூன்று விருதுகள் கிடைத்தன. இவர் இயக்கிய ‘நண்பா நண்பா’ படத்துக்காக வாகை சந்திரசேகருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வந்தாலும் கமர்ஷியல் சுழலுக்குள் சிக்காமல் மாற்று சினிமா பாதையிலேயே இயங்கி வந்தார் ஜெயபாரதி.
நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி, இன்று (டிச.06) காலை 6 மணிக்கு ஜெயபாரதி காலமானார். அவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like