1. Home
  2. தமிழ்நாடு

மனைவியை கொன்று உறவு கொண்ட சைக்கோ கணவன்!!

மனைவியை கொன்று உறவு கொண்ட சைக்கோ கணவன்!!

மனைவியை கொலை செய்து உடலுறவு கொண்டு பின்னர் வீட்டின் அருகிலேயே புதைத்த சைக்கோ கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் காலடி பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த ரத்னவள்ளி (35) என்ற பெண்ணை 3ஆவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திடீரென தனது மனைவி ரத்னவள்ளியை காணவில்லை என்று மகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரத்னவள்ளியை தேடினர். அப்போது அவர்களுக்கு மகேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து மகேஷிடம் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.


மனைவியை கொன்று உறவு கொண்ட சைக்கோ கணவன்!!

அப்போது மகேஷ் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ரத்னவள்ளி, அவரது கணவர் மகேஷிடம் இருவரின் உறவை முறித்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார். இதனால் மகேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

ரத்னவள்ளியின் முடிவுக்கு பின்னால் சேலத்தை சேர்ந்த முத்து என்பவர் இருப்பது மகேஷூக்கு தெரியவந்தது. ரத்னவள்ளியும், முத்துவும் காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் ரத்னவள்ளியை கொலை செய்தார்.

அதன்பிறகு உடலுடன் உறவில் ஈடுபட்டு பின்னர் நிர்வாணமாக ரத்னவள்ளியின் உடலை வீட்டிற்கு பக்கத்திலேயே புதைத்துள்ளார். இதனையடுத்து உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like