1. Home
  2. தமிழ்நாடு

மனித உரிமையை மேம்படுத்த இதெல்லாம் அவசியம்...குடியரசு தலைவர் அறிவுரை!

மனித உரிமையை மேம்படுத்த இதெல்லாம் அவசியம்...குடியரசு தலைவர் அறிவுரை!

மனித உரிமையை மேம்படுத்த கூர் உணர்ச்சியும், இரக்கமும் அவசியம் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் சார்பில் 'அனைவருக்கும் கண்ணியம், சுதந்திரம் மற்றும் நீதி' என்ற கருப்பொருளுடன் மனித உரிமை நாள் விழா நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மனித உரிமையை மேம்படுத்த கூர் உணர்ச்சியும், இரக்கமும் அவசியம் என்று தெரிவித்தார்.


மனித உரிமையை மேம்படுத்த இதெல்லாம் அவசியம்...குடியரசு தலைவர் அறிவுரை!


மேலும், 'உங்களை எப்படி நடத்த வேண்டுமோ அது போல பிறரை நடத்துங்கள்' என்ற வாக்கில் மனித உரிமை அடங்கியுள்ளதாக அவர் கூறினார். விலங்குகளையும், மரங்களையும் அழித்ததன் விளைவுகளை தற்போது நாம் சந்தித்து வருவதாக குறிப்பிட்ட அவர், இயற்கையை கண்ணியத்துடன் கையாள்வது அறம் சார்ந்த கடமை என்றும், அதுவே உயிர் வாழ்வதற்கான அவசியம் என்றும் தெரிவித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like