மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்..!!
ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வங்கிகள் ரூ. 2000 நோட்டுகள் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ள ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று கூறியுள்ளது. மே 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் ரூபாய் 20 ஆயிரம் வரை ரூபாய் 2000 நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 20,000 வரை மட்டுமே 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில், முறைகேடாக சம்பாதித்த ரூ.2,000 நோட்டுகளை திமுகவினர் கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக்கில் மாற்ற வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதை வங்கிகள் கண்காணிக்க மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாமானிய மக்களின் நலனுக்காக இது. திமுக அரசியல்வாதிகள் பணமோசடிக்கான புதிய வழிகளை கண்டுபிடிப்பதில் பெயர் பெற்றவர்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகனும் ஓராண்டில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளனர் என்பதை தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.இப்படிப்பட்ட நிலையில் திமுக அரசியல்வாதிகள் கூட்டுறவு வங்கிகள், டாஸ்மாக் உள்ளிட்ட பல்வேறு வழிகள் மூலம் முறைகேடாக சம்பாதித்த ரூ.2,000-ஐ மாற்றுவார்கள். எனவே இதனை நிதி அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.png)