1. Home
  2. தமிழ்நாடு

மக்களே, மறந்தும் இதை செஞ்சுடாதீங்க.. அப்புறம் அபராதம் கட்டணும்..!

மக்களே, மறந்தும் இதை செஞ்சுடாதீங்க.. அப்புறம் அபராதம் கட்டணும்..!

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது. இதனால், குப்பையை சாலைகளில் கொட்டுவது, காலி இடங்களில் தீ வைத்து எரிப்பது உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதனை தடுக்க அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் கீழ், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து அளிக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது.


அதன்படி, வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் 100 ரூபாய், வணிக நிறுவனங்களுக்கு 500 ரூபாய், வணிக வளாகங்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளது. தெருக்கள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் 100 ரூபாய், வணிக நிறுவனங்களுக்கு 200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும்.

அதேநேரம், குப்பைகளை தெருக்களில் கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால், அனுப்புபவர்களுக்கு 200 ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை நாளை (அக். 10-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது என வேலூர் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like