1. Home
  2. தமிழ்நாடு

மக்களே தெரிஞ்சிக்கோங்க..!! இனி உங்கள் செல்ல பிராணிகள் கடித்தால் நீங்கள் அபராதம் கட்ட வேண்டும்..!!

மக்களே தெரிஞ்சிக்கோங்க..!! இனி உங்கள் செல்ல பிராணிகள் கடித்தால் நீங்கள் அபராதம் கட்ட வேண்டும்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா நகரின் மேம்பாட்டு ஆணைய நிர்வாக கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது,

நொய்டா நகரில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்போர், அதை நொய்டா மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த செல்லப் பிராணிகள் யாரையாவது கடித்தால், அதன் உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இந்த தொகை, நாய் கடியால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொடுக்கப்படும். அடுத்தாண்டு மார்ச் முதல், இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.

மக்களே தெரிஞ்சிக்கோங்க..!! இனி உங்கள் செல்ல பிராணிகள் கடித்தால் நீங்கள் அபராதம் கட்ட வேண்டும்..!!

வளர்ப்பு நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தாவிட்டால், அடுத்தாண்டு மார்ச் முதல், மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

செல்லப் பிராணிகளின் கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால், அதை சுத்தம் செய்ய வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு. இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

Trending News

Latest News

You May Like