மக்களே உஷார்..!! இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிப்பு…!!
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மத்திய சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிக்கு பிறகு இந்தியாவில் தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் 78 சதவீதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 1807 புதிய கொரோனா வகை வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று முன்தினம் 1890 பேருக்கு புதிதாக தோற்று உறுதியாகியுள்ளது. தற்போது தொற்று அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.