1. Home
  2. தமிழ்நாடு

மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் மீது இண்டிகோ விமான சேவை நிறுவனம் வழக்கு..!

1

இந்தியாவின் விமான சேவையில் 60 சதவீதம் இண்டிகோ நிறுவனம் செய்து வருகிறது. 6E என்பது இந்த நிறுவனத்தின் அடையாளக் குறியீடு ஆகும். விமானப் பயணம் தொடர்பாக 6E என்றாலே அது இண்டிகோ நிறுவனத்தையே குறிக்கும்.

இந்நிலையில் மகேந்திரா நிறுவனம் புதிதாக முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய வகையில் புதிய எஸ்யூவி மாடல் கார்களை தயாரித்துள்ளது. இதன் விளம்பரம் பரபரப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் பேசப்படுகிறது.

"BE 6e" மற்றும் "XEV 9e என இரண்டு மாடல்களை மகேந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் BE 6e மாடலில் 6E என்று வருவதை ஆட்சேபித்து இண்டிகோ நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. தங்கள் கார் விமானத்தின் பைலட் கேபின் போலவே இருக்கிறது என்பதை காட்டிக்கொள்வதற்காகவே வேண்டும் என்றே விமான சேவையை குறிக்கும் வகையில் எங்கள் நிறுவனத்தின் 6E அடையாளக் குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளடு என்று இண்டிகோ நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

பங்குச் சந்தை யில் பதிவு செய்துள்ள அறிக்கையில், இண்டிகோ நிறுவனத்துடன் பிரச்சனையை சுமூகமாக முடித்துக் கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக மகேந்திரா நிறுவனம் கூறியுள்ளது.

Trending News

Latest News

You May Like