மகாலட்சுமியுடன் கன்னித்தீவு.. விமான நிலையத்தில் ரவீந்தர் விளக்கம்..!
சமீபத்தில், 'சன் டிவி' புகழ் மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்ட திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர், கன்னித்தீவுக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
உடல் பருமனான திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை சின்னத்திரை நட்சத்திரம் 'சன் டிவி' புகழ் மகாலட்சுமி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டது திரையுலகினர் மட்டுமின்றி மகாலட்சுமியின் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி பல்வேறு விமர்சனங்கள் ஏற்படுத்தியது. இவர்களது திருமண செய்தியை சமூக ஊடங்களில் ரசிகர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்நிலையில், திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த ரவீந்தர் சந்திரசேகர் - மகாலட்சுமி தம்பதியர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தனர். அப்போது ரவீந்தர் சந்திரசேகர் கூறுகையில், "ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது எனக்கே அதிர்ச்சியாகி உள்ளது.
ஒரு திருமணம் இவ்வளவு ஃபேமஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ்த் திரையுலகின் பல பிரபலங்களின் திருமணத்தை ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனங்கள் அதில் பெறாத வருமானத்தை எங்கள் திருமணத்தை வெளியிட்டு பெற்றுள்ளது என்பது ஒரு வித்தியாசமான செயல்.
செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான், டால்மியாபுரத்தில் உள்ள எனது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்துள்ளேன். நாங்கள் கன்னித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி" எனக் கூறினார்.