போலீசாரின் சிறு கவனக்குறைவால் பெண் இளம் மருத்துவர் கத்தரிக்கோலால் சரமாரி குத்திக்கொலை..!!
கேரள மாநிலத்தில் கொட்டாரக்காரா பகுதியில் வசித்து வந்தவர் சந்தீப். 42 வயதான சந்தீப், பள்ளி ஆசிரியர். மதுபோதைக்கு அடிமையாக இருந்திருக்கிறார் சந்தீப். போதைக்காக ஏராளமான போதை வஸ்துகளை சாப்பிட்டு வந்திருக்கிறார்.
போதையில் இருந்த சந்தீப், நேற்று இரவில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார் . அப்போது அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடமும் தகராறு செய்திருக்கிறார். இதை அடுத்து கொட்டாரக்காரா போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர் அதிகாலையில் மருத்துவ பரிசோதனைக்காக கொட்டாரக்காரா தாலுகாவில் உள்ள தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள்.
மருத்துவமனையில் இருக்கின்ற பெண் மருத்துவர் வந்தனா தாஸ் என்பவரிடம் சந்தீப்பை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 23 வயதான அந்த இளம் மருத்துவரிடம் சந்தீப் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சந்தீப், அங்கு மருத்துவமனையில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மருத்துவர் வந்தனாதாசை சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.
உடனே போலீசாரும், மருத்துவமனை ஊழியர்களும் சந்தீப்பை பிடிக்க வேண்டும் முயன்றுள்ளனர். அவர்களையும் கத்தியால் குத்தி இருக்கிறார் . ஆனாலும் படுகாயம் அடைந்து சிரமப்பட்டு சந்தீப்பை பிடித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நேரத்தில் பெண் மருத்துவர் குத்தி கொலை செய்யப்பட்டதால் இந்த சம்பவத்தை கண்டித்து கேரள மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் என்று அனைத்து பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்