1. Home
  2. தமிழ்நாடு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு..!!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு..!!

டெல்லி மல்யுத்த வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது.

அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. புதுகை அப்துல்லா அவர்கள் இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்" என்றார்.



Trending News

Latest News

You May Like