1. Home
  2. தமிழ்நாடு

போதிய ஆதாரங்கள் இல்லை.. பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர் விடுதலை..!

போதிய ஆதாரங்கள் இல்லை.. பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர் விடுதலை..!

இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் கைதான இளைஞர், குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி 6 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் வாடா தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் சாகர் வாமன் (33). திருமணமான இவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ம் தேதி பால்கர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் அந்த இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார்.


பிரேத பரிசோதனையில், அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்ததாக சாகர் வாமனை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஏற்கனவே திருமணமான சாகர் வாமன் 18 வயது பெண்ணுடன் உறவில் இருந்துள்ளார். சம்பவத்தன்று திருமணத்துக்கு வற்புறுத்திய இளம்பெண்ணை அவர் கற்பழித்து கொலை செய்தார்’ என வாதிட்டார்.


எனினும் கோர்ட், வாமன் மீதான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவரை விடுதலை செய்தது. அதேநேரத்தில், வழக்கு விசாரணையின் போது போலீசாரிடம் தவறான தகவல்களை கூறியதற்காக வாமனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து, கைது செய்தது முதல் 6 ஆண்டுகள் சிறையில் இருந்ததால், அவரை உடனடியாக விடுவிக்க கோர்ட் உத்தரவிட்டது.

Trending News

Latest News

You May Like