பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர்!!
மதுரை ஆரப்பாளையம் செட்டியார் லையன் குடியிருப்பில் வசித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் மாட்டுத்தாவணி ஆரப்பாளையம் இடையே இயங்கக்கூடிய பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
கூடல் நகர் பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவர் அந்த பேருந்தில் நடத்துனராக இருந்து வரக்கூடிய நிலையில் மாணவிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவி தனக்கு நடந்ததை தன்னுடைய அண்ணனிடம் கூறினார். அவர் அந்த நடத்துனரை நேரில் சென்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடத்துனர் பேருந்திலேயே அப்பெண்ணின் அண்ணனை மிரட்டியதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in