1. Home
  2. தமிழ்நாடு

பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த பள்ளி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை..!!

பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த பள்ளி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை..!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மின்னாம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி சசிகலா. இவர்களுடைய மகன் விஷ்ணுப்பிரியன் (13). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று காலை அவனை பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விஷ்ணுப்பிரியன் மனம் உடைந்த நிலையில் இருந்ததாக தெரிகிறது.


பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த பள்ளி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை..!!

வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய பெற்றோர் மகனை காணாமல் தவித்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல இடங்களில் தேடினர். அப்போது அதே பகுதியில் உள்ள கிணற்றின் மேல் பகுதியில் விஷ்ணுப்பிரியனின் செருப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பெற்றோர் எண்ணினர்.

இதுகுறித்து அவர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இறங்கி விஷ்ணுப்பிரியனின் உடலை மீட்டனர். அப்போது மாணவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்த விஷ்ணுப்பிரியன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. பெற்றோர் திட்டியதால் பள்ளி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Trending News

Latest News

You May Like