பெண்கள் பள்ளி செல்வதை தடுக்க காற்றில் விஷம் பரப்பிய கொடூரம்!!
பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை தடுப்பதற்காக மர்ம நபர்கள் காற்றில் விஷத்தை பரப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிற்போக்குத்தனம் உலகம் முழுவதும் இப்போதும் பரவி இருக்கிறது. நாகரிகம் இவ்வளவு வளர்ச்சி அடைந்த பின்னரும் கூட மாசடைந்த மூளையுடன் பலரும் வாழ்கின்றனர். அதனால் தான் பெண்களுக்கு இப்போதும் உரிமை மறுக்கப்படுகிறது. அதற்கு உதாரணமான சம்பவம் ஈரான் நாட்டில் நடந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஈரான் தலைநகர் தெஹ்ரானின் தெற்கு பகுதியில் உள்ள கோம் நகரில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவிகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. அவர்கள் சுவாச பகுதியில் விஷம் பரவியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தில் இறங்கினர். இந்த விவகாரம் குறித்து அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
விசாரணையில், சிலர் விஷத்தை காற்றில் வேண்டுமென்றே பரப்புவது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட சிலர் பெண்கள் பள்ளிக்கு செல்வதை விரும்பவில்லை என தெரிகிறது. அதனால் பள்ளிகளை மூடவேண்டும் என்பதற்காக காற்றில் விஷத்தை பரப்புகின்றனர்.
அவர்களை விரைவில் கண்டுபிடித்து கைது செய்வோம் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
newstm.in