1. Home
  2. தமிழ்நாடு

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: திமுக நிர்வாகிகளை கைது செய்ய பாஜக கோரிக்கை..!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: திமுக நிர்வாகிகளை கைது செய்ய பாஜக கோரிக்கை..!

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த திமுக இளைஞரணி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.


மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய முதல்வர் உடனடியாக உத்தரவிட வேண்டும்” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like