1. Home
  2. தமிழ்நாடு

புது வீட்டிற்கு பால் காய்ச்சிய ஜி.பி.முத்து… சூப்பரான வீடு!!

புது வீட்டிற்கு பால் காய்ச்சிய ஜி.பி.முத்து… சூப்பரான வீடு!!

சமூக வலைதளங்கள் மூலம் முதன்முதலில் கவனம் ஈர்த்த ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். இவர் 3ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆனால் உழைக்கவும், சாதிக்கவும் படிப்பு தடை இல்லை என்பதை உணர்ந்த ஜிபி முத்து, நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

வியாபாரம் கற்றுக் கொண்டு, 10 வருடத்திற்கு பிறகு சொந்தமாக கடையை தொடங்கினார். பின்னர் திருமணம் செய்து கொண்ட அவர் வேறு ஒரு வீட்டுக்கு குடிபெயர்ந்தார். அப்போது துரதிஷ்டவசமாக அவரது அண்ணன் ஒரு விபத்தில் இறந்துபோகவே, சகோதரனின் குழந்தைகளையும் இவரே கவனித்து வருகிறார்.


புது வீட்டிற்கு பால் காய்ச்சிய ஜி.பி.முத்து… சூப்பரான வீடு!!


அதனைத் தொடர்ந்து ஜிபி முத்து, சின்ன சின்ன வீடியோக்கள் கிரியேட் செய்து அவற்றை இணையத்தில் பதிவேற்றுவதை வழக்கமாக கொண்டிருந்தார். டிக்டாக் போன்ற செயலிகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொண்டதால்தான் ஜிபி முத்து இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

அவர் பேசும் “செத்த பயலே… நாரப் பயலே…” போன்ற வசனங்கள் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்தது. அதன்பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கினார். ஆனால் குழந்தைகளை பார்க்க வேண்டும் என அவராகவே வெளியே வந்துவிட்டார்.


புது வீட்டிற்கு பால் காய்ச்சிய ஜி.பி.முத்து… சூப்பரான வீடு!!


அவரது பயணத்தில் அடுத்ததாக திரைத்துறையிலும் கால் பதித்துள்ளார். பல படங்களில் நடித்து வரும் ஜிபி முத்து, பிரபல நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் விழாவில் சன்னி லியோனுடன் கலந்து கொண்ட புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் ஜிபி முத்து தான் தங்கி இருந்த பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு சென்று இருக்கிறார். புதிய வீட்டில் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக பால் காய்ச்சி ஹோம் டூர் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.



newstm.in

Trending News

Latest News

You May Like