பிரபல நடிகைக்கு பிடிவாரன்ட்: சிறப்பு கோர்ட் அதிரடி உத்தரவு..!
பிரபல நடிகை ஜெயப்பிரதாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரபிரதேச சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பாஜக சார்பில் பிரபல நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால், எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது நடிகை ஜெயப்பிரதா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள், எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் நடிகை ஜெயப்பிரதா கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.