1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் தலைமையில் ஆலோசனை.. டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..!

பிரதமர் தலைமையில் ஆலோசனை.. டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.


மத்திய அரசு 32 பிரிவுகளில் நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னையில் ஜி-20 கூட்டம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில், ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்று இரவே அவர் சென்னை திரும்ப உள்ளார்.

Trending News

Latest News

You May Like