1. Home
  2. தமிழ்நாடு

பிரதமருடன் சுராங்கனி பாடல் பாடி மகிழ்ந்த தமிழக வீரர்கள்!! VIDEO

பிரதமருடன் சுராங்கனி பாடல் பாடி மகிழ்ந்த தமிழக வீரர்கள்!! VIDEO

பிரதமர் மோடி லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.

வீரர்களுக்குப் பிரதமர் மோடி இனிப்புக்களை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக வீரர்கள் தமிழில் பிரபல பாடலான "சுராங்கனி சுராங்கனி" பாடலை பாடினர்.


பிரதமருடன் சுராங்கனி பாடல் பாடி மகிழ்ந்த தமிழக வீரர்கள்!! VIDEO

அந்த தருணத்தின் வீடியோவை பிரதமர் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


தமிழக வீரர்கள் அவர்களின் நிகழ்ச்சி மூலம் தங்களைப் பரவசப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளியை எல்லையில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like