1. Home
  2. தமிழ்நாடு

பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு.. இந்த ஆண்டு யாருக்கு தெரியுமா..?

பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு.. இந்த ஆண்டு யாருக்கு தெரியுமா..?

பழம்பெரும் ஹிந்தி நடிகை ஆஷா பரேக்-குக்கு, இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்கு கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு.. இந்த ஆண்டு யாருக்கு தெரியுமா..?

சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி.பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரின் புகழுக்கு தாதாசாகேப் விருது மேலும் பெருமை சேர்த்துள்ளது.

இந்நிலையில், பாலிவுட்டில் 1960 மற்றும் 1970களில் முன்னணி நடிகையாக இருந்தவர் குஜராத்தைச் சேர்ந்த ஆஷா பரேக். தற்போது அவருக்கு 79 வயது ஆகிறது. இந்நிலையில், அவருக்கு இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அறிவித்துள்ளார்.


ஆஷா பரேக், 1952-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை திரைத்துறையில் நடிகையாக பணியாற்றினார். அவருக்கு, 1992-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கடந்த வருடங்களில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், வினோத் கன்னா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like