1. Home
  2. தமிழ்நாடு

பாலைத் தொடர்ந்து நெய்.. மக்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆவின்..!

பாலைத் தொடர்ந்து நெய்.. மக்களுக்கு அதிர்ச்சி அளித்த ஆவின்..!

தமிழக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் விலை ஏற்கெனவே உயர்த்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது நெய்யின் விலையும் லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆவின் நெய் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை உயர்வின் படி, ஒரு லிட்டர் நெய் 580 ரூபாயில் இருந்து 630 ரூபாயாக உயர்ந்துள்ளது.


அதேபோல், 5 லிட்டர் நெய் 2,900 ரூபாயில் இருந்து, 3,250 ரூபாயாகவும், 500 மில்லி நெய் 290 ரூபாயில் இருந்து 315 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி ரூ.130ல் இருந்து 145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி 515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் நெய் 535 ரூபாயாகவும், ஜூலை 21-ம் தேதி 535 ரூபாயில் இருந்து 580 ரூபாயாகவும் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 580 ரூபாயில் இருந்து 630 ரூபாய் என கடந்த 9மாதங்களில் மட்டும் ஒரு லிட்டர் நெய்க்கு (20+45+50) 115.ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Trending News

Latest News

You May Like