1. Home
  2. தமிழ்நாடு

பாஜகவை சேர்ந்த பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு!!

பாஜகவை சேர்ந்த பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு!!

போஜ்புரி நடிகரும், பாஜக ஆதரவாளருமான பவன் சிங் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போஜ்புரியில் பவன் சிங் நடிகராக மட்டுமில்லாமல், பாடகராகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு இவருக்கும் நீலம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

ஆனால் ஒரு ஆண்டிலேயே நீலம் தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சில மாதங்களுக்கு பிறகு இவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.


பாஜகவை சேர்ந்த பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு!!


இதையடுத்து 2018ஆம் ஆண்டு ஜோதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களிலே ஜோதியை பவன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி வருமாறு கொடுமை படுத்தியுள்ளனர்.

அதன்படி அவரிடம் இருந்து 50 லட்ச ரூபாய் ரொக்கமும் பெற்றுள்ளனர். ஆனாலும் பவன் சிங், அவரது தாய் மற்றும் சகோதரி சேர்ந்து தொடர்ந்து கொடுமை படுத்தி வந்துள்ளனர். இதனிடையே தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த ஜோதியை மன ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளனர்.


பாஜகவை சேர்ந்த பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு!!

அதோடு அவருக்கு கருக்கலைப்பு மருந்து கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளனர். தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளான ஜோதி கடந்த ஏப்ரல் மாதம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் பவன்சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளதால் இது தற்போது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like