பாஜக எம்.பி.யை எட்டி உதைத்த பசு! வீடியோ!!
ஆசி வாங்கவந்த பாஜக எம்.பியை பசு ஒன்று எட்டி உதைத்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆந்திராவை சேர்ந்த பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான ஜி.வி.எல். நரசிம்ம ராவ் என்பவர் குண்டூரில் உள்ள மார்க்கெட் யார்டில் மிளகாய் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அதன்பின்னர் அங்கு பசு, மற்றும் எருதுகளை கட்டி வைத்திருக்கும் இடத்துக்கு சென்று அங்குள்ள பசு ஒன்றிடம் ஆசி வாங்க முயற்சி செய்தார்.
அப்போது பாஜக எம்.பியை கண்டு அச்சம் அடைந்த பசு முதல் முறை அவரை எட்டி உதைத்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனாலும் மனம் தளராத எம்.பி இரண்டாம் முறையும் பசுவிடம் ஆசிவாங்க சென்றார். அப்போது பசு அவரை எட்டி உதைத்தது. அதன்பின்னர் பசுவை கண்டு அஞ்சிய அவர் கையெடுத்து கும்பிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.
இது தொடர்பாக வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. பாஜகவின் முக்கிய நபர்கள் பசுவை புனிதமாக கருதி அதனை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
newstm.in