1. Home
  2. தமிழ்நாடு

பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்..!!

பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்..!!

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முறையாக செயல்படுகிறதா என்றும், உணவு தரமானதாக உள்ளதா என்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (பிப்.16) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மாணவர்களுக்கு பரிமாறப்படும் உணவுகளை சாப்பிட்டு தரத்தினை சோதித்த அமைச்சர் உதயநிதி, மாணவர்களிடமும் இதுபற்றி கேட்டறிந்தார்.

மேலும், மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? எனவும் சோதித்தார். பின்னர், உணவு கூடங்களில் இருக்கும் மூலப் பொருட்களின் இருப்பையும் ஆய்வு செய்திருக்கிறார்.


பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்..!!



தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பள்ளிகளில் ஆய்வு செய்துள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது அங்குள்ள பள்ளிகளில் இதுபோன்று ஆய்வுகளை மேற்கொண்டு, முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. சேலம் மாநகராட்சியில் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தினால் மாணவர்கள் பள்ளிக்கு காலையில் விரைவாக வருகின்றனர். புதிதாக மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள் மாணவர்கள் ஏதேனும் குறைகள் தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். மாணவர்களின் வருகைப் பதிவேடு மற்றும் மாணவர்களின் சேர்க்கையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.


பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின்..!!

இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில் சேலம் மாநகராட்சி திருவாக்கவுண்டனூர் துவக்கப் பள்ளிக்கு இன்று காலை சென்று மாணவர்களுடன் சிற்றுண்டி உண்டு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்தோம். உணவின் தரம், சுவை, உணவு வரும் நேரம், மாணவர்கள் வரவர அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்தோம்.மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் இடத்தை பார்வையிட்டு இருப்பை ஆய்வு செய்தோம். அப்போது அரிசி கூடுதலாக 20 கிலோ இருப்பு இருப்பது தெரியவந்தது. மாணவர்களின் வருகைக்கேற்ப உணவுப்பொருள் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினோம்.


Trending News

Latest News

You May Like