1. Home
  2. தமிழ்நாடு

பரபரப்பு! மின்சார ரயிலில் கத்தியை தீட்டியபடி மாணவர்கள் பயணம்!!


சென்னை புறநகர் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் கத்தியை தீட்டியபடி பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர்கள், பஸ் டே என்ற பெயரிலும், மின்சார ரயில் பயணத்தின்போதும் அத்துமீறுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் உடன் பயணிக்கும் பொதுமக்கள் அச்ச உணர்வுடன் பயணிக்கும் சூழல் ஏற்படுகிறது.

அதைப்போன்ற சம்பவம்தான் தற்போது சென்னை புறநகர் மின்சார ரயிலில் நடந்துள்ளது. சென்னை சென்ட்ரல் வரை செல்லக்கூடிய மின்சார ரயில், பட்டாபிராம் இந்து கல்லூரியில் நின்று புறப்பட்டது.


பரபரப்பு! மின்சார ரயிலில் கத்தியை தீட்டியபடி மாணவர்கள் பயணம்!!

அதில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள், அபாயகரமாக தொங்கியபடி கையில் இருந்த அலுமினிய பட்டாக்கத்தியை நடைமேடையில் தேய்த்த படியே, கூச்சலிட்டனர்.

அதில் ஒரு மாணவன் ஜன்னலில் தொங்கிய படி கோஷம் போட்டுக் கொண்டு பயணம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை ஆதாரமாக கொண்டு, ரயில்வே பாதுகாப்புப்படை காவலர், ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், வழக்கு பதிந்து, ரயில் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like