பரபரப்பு! கல்வி நிலையம் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு!!
ஆப்கானிஸ்தானில் கல்வி நிலையம் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
காபூல் நகரம் டஷ் - இ - பார்ஷி பகுதியில் உள்ள கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவிகள் கூடி இருந்தனர். அப்போது, அந்த பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி திடீரென வெடிகுண்டை வெடிக்கச்செய்தார்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். முதலில் 19 பேர் உயிரிழந்த நிலையில், அதன்பின்னர் பலி எண்ணிக்கை அதிகரித்தது. இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் நேற்று காபூலில் உள்ள ஒரு கல்வி நிலையம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகின.
newstm.in