1. Home
  2. தமிழ்நாடு

பணிச் சுமை அதிகரிப்பு.. தலைமை ஆசிரியை தற்கொலை..!

பணிச் சுமை அதிகரிப்பு.. தலைமை ஆசிரியை தற்கொலை..!

கேரளாவில், பணிச் சுமை அதிகரிப்பு காரணமாக தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வைக்கம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீஜா (48). இவருக்கு கடந்த ஜூன் மாதம் அங்குள்ள தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.


அதன்பின் அவருக்கு பணிச் சுமை கூடியது. எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக உறவினர்களிடம் கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மனமுடைந்த ஸ்ரீஜா நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

அதிக பணிச்சுமை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like