பகத்சிங் நாடக ஒத்திகை… தூக்கு கயிற்றில் தொங்கிய மாணவன் பலி!!
கன்னட மாநிலம் உதயமான நவம்பர் 1ஆம் தேதி கன்னட ராஜ்ய உற்சவ நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாணவர்கள் வரலாற்று நாடகங்கள் நடித்துக் காட்டுவது வழக்கம் என்பதால் அதற்கான ஒத்திகையில் ஈடுபட்டுவார்கள்.
அந்த வகையில், சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவன் சஞ்சய் கௌடா நாடகத்தில் பகத்சிங்காக வேடமிட்டு நடிப்பதற்காக ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார்.
பெற்றோர் வெளியே சென்றிருந்த போது பகத்சிங் தூக்கிலிடப்படும் காட்சியை சிறுவன் ஒத்திகை செய்து பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக தூக்குக் கயிற்றில் தொங்கியவாறு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தகவல் அறிந்து விசாரணை நடத்திய போலீஸார் மாணவன் ஒத்திகையில் ஈடுபடும் போது தவறுதலாக உயிரிழந்தது தெரிய வந்தது. தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் கட்டுரையில் உள்ளது போல சிறுவன் தூக்கு ஒத்திகை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இனி நாடகங்களில் இது போன்ற காட்சிகள் இடம் பெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடக ஒத்திகையில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in