1. Home
  2. தமிழ்நாடு

நேர்காணலுக்கு சென்ற போது மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை!!

நேர்காணலுக்கு சென்ற போது மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை!!

வேலைக்கான நேர்காணலுக்கு சென்ற பெண் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பொறியல் பட்டதாரி பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் வேலை தேடி வந்தார். அப்போது வேலை காலி இருப்பதாக துஷார் சர்மா என்பவரின் தொடர்பு அவருக்கு கிடைத்தது.

அவர் வேலை தொடர்பாக சஹாரா வணிக வளாகத்திற்கு நேர்காணலுக்கு வருமாறு பெண்ணை அழைத்துள்ளார். ஆவணங்களுடன் அப்பெண் தயாராக துஷார் சர்மாவை சந்திக்க சென்றார்.


நேர்காணலுக்கு சென்ற போது மயக்க மருந்து கொடுத்து வன்கொடுமை!!

அப்போது வணிக வளாகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த அந்த நபர், அப்பெண்ணை கார் பார்க்கிங் இடத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அங்கு பானம் ஒன்றை பெண்ணுக்கு வழங்கினார்.

பானத்தை குடித்த பெண் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்த போது, அங்கிருந்த காருக்குள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் பார்க்கிங்கில் பெண்ணை தனியாக விட்டுவிட்டு அவர் காரில் தப்பிச் சென்றார்.

இதனையடுத்து அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like