1. Home
  2. தமிழ்நாடு

நாளை பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகள் இலவசம்..!!

நாளை பி.எஸ்.என்.எல். சிம் கார்டுகள் இலவசம்..!!

பி.எஸ்.என்.எல். உதவி பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

புதுச்சேரி பி.எஸ்.என்.எல் நிர்வாகம் சார்பில் மேட்டுப்பாளையம், வில்லியனூர், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, தவளகுப்பம், எல்லைபிள்ளைச்சாவடி, நெட்டப்பாக்கம், முதலியார்பேட்டை ஆகிய பஸ் நிறுத்தங்களிலும், தலைமை பொது தொலைபேசி நிலையம், காமராஜர் நகர் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் மையம் மற்றும் மூலக்குளம் ஆகிய பகுதிகளில் இலவச சிம்கார்டு சிறப்பு விற்பனை முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.

முகாமில் ரூ.269 மதிப்புள்ள பி.எஸ்.என்.எல் 4ஜி சிம்கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சிம் கார்டில் முதல் 45 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். மேலும் தினசரி 2 ஜி.பி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசமாகும். அத்துடன் பாரத் பைபர் நுழைவு பிளான் ரூ.329/- முதல் இணைப்புகள் வழங்க உள்ளது.

லேண்ட்லைன் போனை தொலைபேசி எண்கள் மாறாமல் புதிய பாரத் பைபராக மாற்றும் வசதியும் உள்ளது. புதிய பாரத் பைபர் இணைப்பு பெற 94863 30000 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Trending News

Latest News

You May Like