நாளை உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு!!
ஜல்லிக்கட்டு மீதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு, உச்ச நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழகம் முழுதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இது நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்தது.
அந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த அவசர சட்டத்தை எதிர்த்து, ‛பீட்டா' எனப்படும் விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
வழக்கை விசாரித்த, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்தாண்டு டிசம்பர் மாதம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு, நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in