நாளை இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!!
வேலூர் மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா ஆண்டுதோறும் வைகாசி 1 ம் தேதி விமர்சையாக நடைபெறும் இந்த ஆண்டு மே 15ஆம் தேதி கெங்கை அம்மன் சிரசு திருவிழா நடைபெறுகிறது. இந்த சிரசு திருவிழாவில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திர, கர்நாடக, மாநிலத்தில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
பொதுமக்கள், அரசு அலுவலர்கள் கலந்துக்கொள்ள வசதியாக, சிரசு ஊர்வல திருவிழா நடைபெறும் நாளான மே 15-ந் தேதி வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன்,
“கங்கை அம்மன் சிரசு திருவிழாவில் கடந்த ஆண்டு 5 லட்சம் பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள். இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரசு திருவிழாவை முன்னிட்டு 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதகூடுதலாக சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
மக்கள் பாதுகாப்பாக வந்து செல்ல அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவவாக செய்யப்பட்டுள்ளது. பழைய குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.பக்தர்கள் எந்தவிதமான அச்சமின்றி சிரசு திருவிழாவிற்கு வந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட காவல் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
இதனிடையே கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு ஊர்வல திருவிழாவை முன்னிட்டு 15.05.2023 அன்று திங்கட்கிழமை வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கு பதிலாக (24.06.2023) சனிக்கிழமை அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், (25.06.2023) ஞாயிற்றுக்கிழமை அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.