1. Home
  2. தமிழ்நாடு

நாட்டையே உலுக்கிய மரணம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு..!!

நாட்டையே உலுக்கிய மரணம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு..!!

பீட்டல் மாவட்டம் மாண்டவி கிராமத்தை சேர்ந்த தன்மய் (வயது 5) என்ற சிறுவன் கடந்த 6-ந் தேதியன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் இருந்த சரியாக மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். உடனிருந்த சிறுவர்கள் ஓடோடி பெரியவர்களிடம் தெரிவித்ததில், உடனடியாக மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. இரவே மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்தோரும் சிறுவனை மீட்பதில் இணைந்தனர்.

சிறுவனை உயிருடன் மீட்கும் பணியில் களமிறங்கிய அவர்கள் சுமார் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றின் 55 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பதாக கணித்தனர். கிணற்றின் ஆழம் அதிகம் என்பதால் சிறுவன் மேலும் சறுக்கி செல்வது மீட்பு பணியை சவாலாக்கி வருகிறது.


நாட்டையே உலுக்கிய மரணம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு..!!

இந்நிலையில், தொடர்ந்து 5 நாட்களாக மீட்புபணி நடைபெற்று வந்த நிலையில் நேற்று இறந்த நிலையில் சிறுவனின் உடலை மீட்டனர். சிறுவன் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Trending News

Latest News

You May Like