1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து : அமித்ஷா..!!

நாங்கள் தெலுங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து : அமித்ஷா..!!

தெலுங்கானாவில் இஸ்லாமியர்கள் பிற்படுத்தப்பட்டோராக கருதப்பட்டு அவர்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய அமித்ஷா, "தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் அரசு, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசதுத்தீன் ஒவைசியின் கொள்கைகளை நிறைவேற்றி வருகிறது. காரின் கைப்பிடி மஹ்லிஸ் ஒவைசியிடன் இருக்கும்போது அது எப்படி சரியான திசையை நோக்கி செல்லும்.

கே சந்திரசேகர் ராவின் ஊழல் ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. சந்திரசேகர் ராவ் பிரதமராக வேண்டும் என்ற கனவில் உள்ளார். 2024 தேர்தலிலும் அந்த இடத்தை நரேந்திர மோடியே வைத்து இருப்பார். முதலில் அவர் இந்த ஆண்டு தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தலில் தன்னுடைய இருக்கையில் தக்க வைப்பதில் கவனம் செலுத்தட்டும். தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்" என்றார்.

Trending News

Latest News

You May Like