1. Home
  2. தமிழ்நாடு

நாகாலாந்து வரலாற்றிலேயே முதன்முறையாக வெற்றி மகுடம் சூடிய இரு பெண்கள்..!

நாகாலாந்து வரலாற்றிலேயே முதன்முறையாக வெற்றி மகுடம் சூடிய இரு பெண்கள்..!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. நாகாலாந்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

நாகாலாந்து மாநிலத்தை பொறுத்தவரையில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக. ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP) இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. இதில் NTPP 40 தொகுதியிலும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் முதன்முறையாக நாகாலாந்து மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இரு பெண்கள் தேர்வாகியுள்ளனர். மேற்கு அங்கமி தொகுதியில் போட்டியிட்டு சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல ஹெகானி ஜகாலு திமாபூர் மூன்றாம் தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

நாகலாந்து தனிமாநிலமாக உருவான பிறகு இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றது கிடையாது. இந்த சூழ்நிலையில் சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் மற்றும் ஹெகானி ஜகாலு வெற்றிபெற்று வரலாற்றை மாற்றி எழுதியிருக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like