1. Home
  2. தமிழ்நாடு

நவரச நாயகன் கார்த்திக்கிற்கு என்ன பிரச்னை!?

நவரச நாயகன் கார்த்திக்கிற்கு என்ன பிரச்னை!?

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தில் மஞ்சிமா அறிமுகமானார்.

கௌதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் கடந்த 2019ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான 'தேவராட்டம்' படத்திலிருந்தே காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் கடந்த மாதம் 28ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் அவர்களுக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.


நவரச நாயகன் கார்த்திக்கிற்கு என்ன பிரச்னை!?


மகன் திருமணத்தின் போது நடிகர் கார்த்திக் நீண்ட நேரம் நிற்க முடியாமல் அவதிப்பட்டார். அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

நடிகர் கார்த்திக் உடற்பயிற்சின் போது தவறி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் மீண்டும் அடிபட்டது.


நவரச நாயகன் கார்த்திக்கிற்கு என்ன பிரச்னை!?


அதனால் எலும்பில் விரிசல் ஏற்பட்டதால், அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனால், மகன் கௌதம் கார்த்திக்கின் திருமணத்தில் போது கார்த்திக் ரொம்பவே கஷ்டப்பட்டார்.

newstm.in

Trending News

Latest News

You May Like