நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரத்தில் நாளை மாலை அறிக்கை - அமைச்சர் பேட்டி
நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது.
வாடகைத்தாய் விவகாரத்தில் அரசின் சட்டம், நயன் விக்கி குழந்தைப்பெற்ற விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்கப்பட்டபோது அவர் இதுகுறித்து முழுமையான அறிக்கை நாளை மாலை விரிவாக அரசு அளிக்கும் என்று தெரிவித்தார். துணைக்கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் பொறுங்க நாளை மாலை அனைத்து விவரங்களும் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
வாடகைதாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில் நாளை அறிக்கை வெளியிடப்படவுள்ளது.