நடிகர் விஜயை சந்திக்கலாம் - முக்கிய அப்டேட்..!
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்குமாறு நடிகரும், தவெக தலைவருமான விஜய் உத்தரவிட்டுள்ளார். 10 நாட்களுக்குள் இந்த பணியை முடிக்குமாறு அவர் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எந்த குளறுபடியும் இன்றி மாவட்டம் வாரியாக மாணவர்களை தேர்வு செய்வதற்காக இணையதள லிங்க் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது பிறந்த நாளுக்கு முன்பாக மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கவும், தேர்தல் முடிந்த உடன் தமிழக வெற்றிக் கழக பணிகளை தீவிரப்படுத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.