1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் தனுஷின் படத்திற்கு மீண்டும் சிக்கல்!?


தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தின் குண்டு வெடிப்பு காட்சிகள் அனுமதி வாங்காமல் படமாக்கப்பட்டதாக மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

1930 – 40ஆம் ஆண்டு காலத்தின் கதையை அடிப்படையாக கொண்டு தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் தயாராகி வருகிறது. அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்கிவருகிறார்.

முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை அருகே உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பாதுகாப்பு மண்டலத்தில் வனவிலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.


நடிகர் தனுஷின் படத்திற்கு மீண்டும் சிக்கல்!?

அதிக ஒளியிலான பீம் லைட்கள் மற்றும் தீயை எரிப்பது மட்டுமல்லாமல், வெடிகுண்டு வெடிப்புகள் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகளை படக்குழுவினர் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் படமாக்கி வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.

இதனையடுத்து உரிய அனுமதி வாங்கவில்லை எனக்கூறி படப்பிடிப்பு நடத்த மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தடை விதித்தார். இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் முறையான அனுமதி பெற்று கேப்டன் மில்லர் படப்பிடிப்பு துவங்கியது.

இந்த நிலையில் பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில் உரிய அனுமதி பெறாமல் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்படுவதாக அரிட்டாபட்டி பாதுகாப்புச் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like