நடத்துனரிடம் எனக்கு 'ஓசி' டிக்கெட் வேண்டாம் என கூறி மல்லுக்கட்டிய மூதாட்டி!! வைரல் வீடியோ..!!
எனக்கு 'ஓசி' டிக்கெட் வேண்டாம் என கூறி கோவையில் மூதாட்டி ஒருவர் நடத்துனரிடம் மல்லுக்கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
அதில், "உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்." என்றார்.
அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும், திமுக தலைவரான முதலவர் மு.க.ஸ்டாலின் அங்கீகரித்து வழங்கியுள்ள திட்டத்தை எப்படி அமைச்சர் தரம்தாழ்த்தி விமர்சனம் செய்கிறார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர் காசு கொடுத்து பயணச்சீட்டை கேட்டுள்ளார். அதற்க்கு நடத்துனர் காசு வேண்டாம் இலவசம் என்று கூறியதும் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஓசி டிக்கட் எனக்கு வேண்டாம் பணத்தை வாங்கி கொண்டு டிக்கட் கொடு என்று ஆவேசமாக நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
நீண்ட நேரம் நடத்துனரிடம் விவாதத்தில் ஈடுபட்ட அந்த மூதாட்டி ஒருவிதமாக சமாதானம் அடைந்தார். இந்த சம்பவத்தை அதே பேருந்தில் பயணம் செய்த யாரோ ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.