1. Home
  2. தமிழ்நாடு

தையலுக்கு பதில் ஃபெவி குயிக் போட்டு ஒட்டிய மருத்துவமனை!!

தையலுக்கு பதில் ஃபெவி குயிக் போட்டு ஒட்டிய மருத்துவமனை!!

சிறுவனுக்கு காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடுவதற்கு பதில் பெவிகுயிக்கை பூசி ஒட்டிய மருத்துவமனையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்த வம்சி கிருஷ்ணா என்பவரின் மகன் பிரணவ், விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்துள்ளார்.

இதனால் சிறுவனுக்கு புருவத்தில் தசை கிழிந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை ரெயின்போ என்ற மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த மருத்துவர் ரத்தத்தை துடைத்து காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடுவதற்கு பதில் பெவிகுயிக்கை பூசி ஒட்டியுள்ளார்.


தையலுக்கு பதில் ஃபெவி குயிக் போட்டு ஒட்டிய மருத்துவமனை!!


மகனின் காயத்தில் தையல் இல்லாமல் ஒட்டப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த பிரணவ்வின் தந்தை வம்சி தனது மகனை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துசென்றார்.

அங்குள்ள மருத்துவர்களிடம் நடந்ததை கூறினார். காயத்தை பார்த்த மருத்துவர்கள் பெவிகுயிக் கொண்டு ஒட்டியதை கண்டு பிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.


தையலுக்கு பதில் ஃபெவி குயிக் போட்டு ஒட்டிய மருத்துவமனை!!


தொடர்ந்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரின் காயத்தில் இருந்த பெவிகுயிக்கை மருத்துவர்கள் அகற்றினர். பின்னர் இதுகுறித்து வம்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

அதன்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் ரெயின்போ மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like