1. Home
  2. தமிழ்நாடு

துணிவு, வாரிசு ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

துணிவு, வாரிசு ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதி என திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்தும் எச். வினோத்தும் இணையும் இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரித்துள்ளார்.

மஞ்சு வாரியர், ஜான் கொக்கென், யோகிபாபு, மகாநதி சங்கர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.


துணிவு, வாரிசு ரிலீஸ் தேதி அறிவிப்பு!!


இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்கள் தவிர, பிரபு, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

விஜய் நடித்த வாரிசு ஜனவரி 13ஆம் தேதியும் அஜித் நடித்த துணிவு ஜனவரி 12ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என்றும் இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவில் திரையரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்


துணிவு, வாரிசு ரிலீஸ் தேதி அறிவிப்பு!!


கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் நடித்த வீரம் மற்றும் விஜய் நடித்த ஜில்லா ஆகிய படங்கள் பொங்கல் திருநாளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நிலையில் அதன் பின்னர் இப்போதுதான் மீண்டும் இருவரது படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like